திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி)
தோற்றம்: 21 மே 1983 - மறைவு: 30 மே 2026
யாழ். நெடுந்தீவு பூர்வீகமாகவம், முல்லைத்தீவு - மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - பொபினியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று பிரான்சில் அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (தம்பு) - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் (பரா) - இராசலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை - அனிஞ்சியன்குளம் அ,த,க பாடசாலை) தம்பதியினரின் மருமகனும்,
அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
நிந்துஜன், அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாநிதி (பாபு-கனடா), சந்திரபாலன் (மாவீரர் கோபித்), நளாயினி (ஆசிரியை - யாழ் ஜோன் பொஸ்கோ), கோகுலதாஸ் (முன்னாள் ஆசியர் - துணுக்காய் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஶ்ரீசுரேகா (கனடா), சசிகரன் (அதிபர் - முல். யோகபுரம் ம.வித்தியாலயம்), நிஷாந்தினி (முன்னாள் விவசாய போதனாசிரியர் - துணுக்காய்), கோபுசங்கர், ஹரிராம், வைஸ்னா ஆகியோரின் மைத்துனரும்,
அனன்யா, ஆர்யா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
புதியவன், புகழ்நிலா, சாதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 9.00 - 1.00 மணி வரை Joncherolles Intercommunal Cemetery (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் La Courneuve Intercommunal Cemetery (93120 La Courneuve, France) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
