திரு. வைத்தியலிங்கம் கனகேஸ்வரன்

(ஓய்வுபெற்ற வருமான மேற்பார்வையாளர், புத்தூர் பிரதேசசபை)

வைத்தியலிங்கம் கனகேஸ்வரன்

மறைவு: 17 பெப்ரவரி 2026

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும் ஆவரங்கால் சிவன் வீதி, ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாவும் கொண்ட திரு. வைத்தியலிங்கம் கனகேஸ்வரன் அவர்கள் 17-02-2026 ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் (ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தனேஸ்வரன், பரமநாதன் (கனடா), புஸ்பராணி (லண்டன்), பகவதி (மலேசியா), சண்முகநாதன் (கனடா), கணேசமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற சூரியகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராமநாதன், சிவஞானம், பத்மநாதன் மற்றும் கெங்கா, சாந்தா, ஜெகதீஸ்வரி, கதிரவேற்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாக்கியராணி, மற்றும் பாக்கியலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2026 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் அவரது இல்லத்தில்நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக ஆவரங்கால்  கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2026 19:17)