திரு. வைத்திலிங்கம் கருணாநிதி
தோற்றம்: 07 ஏப்ரல் 1955 - மறைவு: 02 மார்ச் 2025
முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - இராமநாதபுரம், பிரித்தானியா - இலண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - பூபதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராசா - குணமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமசாமி, ராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்கா, துளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவன், சர்வானந்தன் (சிவா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இனியா, அஸ்விகா, டிலுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், கணேசலிங்கம், ஜெகதீஸ்வரன், பஞ்சலிங்கம் மற்றும் தமயந்தி, வளர்மதி, முரளிதரன், காயத்ரி, திருமால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுசிலா, குமரதாசன், கோகிலா, கோமளா, குகதாசன், சசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-03-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:30 மணி வரை Charville Community Association (Middlesex, Bury Ave, Hayes UB4 8LF, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் South West Middlesex Crematorium (Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom) புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
