திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை
தோற்றம்: 15 ஜனவரி 1949 - மறைவு: 09 ஏப்ரல் 2025
யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
கோகிலவதனா (நெதர்லாந்து), கோகிலவனஜா (பிரான்ஸ்), ஜெயமாலினி (ஆசிரியை - தி. புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தி (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை, திருக்கோணமலை), தனஞ்செயன் (பிரான்ஸ்), கலாநிதி. சடகோபன் (பொறியிலாளர் - ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஞானவரோதயன், சிவபவான் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரவடிவேலன், ஜெகதீசன் (ஆசிரியர்- தி. புனித மரியாள் கல்லூரி, திருகோணமைல), சிவரூபன் (உரிமையாளர்- சண் எலக்ரோனிக், திருகோணமலை), வதனா (பிரான்ஸ்), சுஜீதா (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சற்குணநாதன், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிரோஷன் (வைத்தியர் - நெதர்லாந்து), கபிலன் (பொறியியலாளர் - நெதர்லாந்து), வைஷ்ணவி (மருந்தாளர் - பிரான்ஸ்), பிரணவன் (பொறியியலாளர் - பிரான்ஸ்), சஞ்சய் (பிரான்ஸ்), அட்ஷரன், அம்ஷவி, ஜாதவி, ஹிருத்திக், அக்ஷயா, அஷானா, ஆதித்யன், அத்விகா, அஸ்விகா, அர்மன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அயான், மைரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் இல.1054, பாலையூற்று திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதனைத் தொடர்ந்து 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் விடத்தற்பளை இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
