திரு. வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன்

(சட்டத்தரணி)

வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1928 - மறைவு: 10 அக்டோபர் 2020

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணி வைத்திலிங்கம் சபாபதி செந்தில்நாதன் அவர்கள் 10.11.2020 செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி செட்டியார் – ராஜம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
 
காலஞ்சென்றவர்களான மானிப்பாயை சேர்ந்த முகாந்திரம் தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜமாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
 
சேரலாதன் (கனடா), காலஞ்சென்ற பிரகலாதன், மற்றும் தயாபாரி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சன் நந்தகோபன் (சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
சுருதி, சுந்தரரமணன் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருமதி விஜயர்த்தனம், ரத்னசபாபதி, காந்திமதி, புனிதவதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்ற ராஜதுரை,மற்றும் ராஜகுணம், ராஜமலர், ராஜாசெல்வம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (11.11.2020) புதன்கிழமை 10 மணி முதல் வைக்கப்பட்டு, பின்னர் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ஸ்ரீரஞ்சனி சிவபாலன்: +94 77 717 1656
நவரத்தினம் சிவபாலன் : +94 77 500 5972
ஏ. ஸ்ரீ சக்திவேல் : +94 77 843 5771
ஏ. ஸ்ரீ மயூரன் :  +94 77 534 0341

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2020 15:26)