திரு. வைத்திலிங்கம் சச்சிதானந்தம்

(முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்)

வைத்திலிங்கம் சச்சிதானந்தம்

தோற்றம்: 09 செப்டம்பர் 1944 - மறைவு: 16 நவம்பர் 2024

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் அவுஸ்திரேலியா, சிட்னியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சச்சிதானந்தம் 15-11-2024 வெள்ளிக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (ஆசிரியர் )-மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற கதிர்காமதம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் துணைவரும்,

Dr. பார்த்தீபன் (தீபன்), சத்தியன் (பொறியியலாளர்), மயூரன் (பொறியியலாளர்-சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அஞ்சலா, சரண்யா, ஆதித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்ஷயன், நேத்திரன், கவினயன், ஆதிரா, அக்ஷரா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

சதானந்தம், திலகவதி, கமலநாதன், ஞானபூங்கோதை, காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம், சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

தவம், திலகவதி, ஞானேஸ்வரி, பத்மநாதன், சுந்தரலிங்கம், சக்திதேவி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலகிருஸ்ணன், சேதுராகவன், அமல்ராஜ், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் சகலனும்

செல்வநாதன் - ஜெகதீஸ்வரி, ஆனந்தநடேசன் - தன்வதி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

Funeral Service Details:-

Date: 24/11/2024 Sunday

Time: 10:30 AM onwards

Venue: 

"Stratus Chapel"

Bunurong Memorial Park

790 Frankston Dandenong Road

Bangholme VIC 3175

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2024 03:41)