Mr. Vaithilingham Kanagaratnam

Vaithilingham Kanagaratnam

Date of Birth: 14 September 1934 - Deceased: 19 February 2026

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கருவப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கு 5ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - தையல்நாயகி தம்பதியினரின் புதல்வனும், செல்லையா - அன்னம்மா தம்பதியினரின் மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீ ஆனந்தகுமார் (அவுஸ்திரேலியா), ஜெயானந்தகுமாரி (ஒய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர் - யாழ் பல்கலைக்கழகம்), கமலகுமாரி (இத்தாலி), சிவானந்தகுமலரி (கனடா), சதான்நதகுமார் (அவுஸ்திரேலியா), பவானந்தகுமார் (அவுஸ்திரேலியா), மகானந்தகுமாரி (ஆசிரியை - யாழ். கொக்குவில் ஶ்ரீ ஞான பண்டித வித்தியாசாலை), வக்சலகுமாரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவகௌரி (அவுஸ்திரேலியா), சரவணகபவ ஐயர் (ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆங்கில மொழி கற்பித்தல் துறை, யாழ் பல்கலைக்கழகம்), குமாரமூர்த்தி (இத்தாலி), சிவகரன் (கனடா), கோமதி (அவுஸ்திரேலியா), பிரசாந்தி (அவுஸ்திரேலியா), மதியழகன் (ஆசிரியர் - யாழ். நாவாந்துறை றோ.க.த பாடசாலை), பிரேம்குமார் (செலான் வங்கி, முல்லைத்தீவுக் கிளை) ஆகியோரின் மாமனாரும்,

சரண், அருண், கீர்திகன், ஹபினயா, ஹபிசன், ஆர்த்தி, ஆரபி, கவின், மகிர்ஷன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னராின் இறுதிக்கிரியைகள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2026 00:00)