Mr. Vaithilingham Kathirgamanathan
Deceased: 17 June 2025
யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வாழ்விடமாகவும், இல-40,2/5, விவேகானந்த வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கதிர்காமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், நித்தியலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்கந்தரூபன் (இலண்டன்), கார்த்திகா (பிரான்ஸ்), அம்பிகா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
அகல்யா (இலண்டன்), சுரேஸ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அக்ஷ்ஷயன், நில்றுக்ஷி, காஷ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
