திரு. வைத்திலிங்கம் சிவபாலன்

வைத்திலிங்கம் சிவபாலன்

தோற்றம்: 21 ஏப்ரல் 1948 - மறைவு: 07 மே 2025

யாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டிச் சேர்ந்த திரு. வைத்திலிங்கம் சிவபாலன் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று கொழும்பில இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - சாவித்திரி தம்பதியினரின் மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்வாசன், செந்தில்குமரன், செந்தில்ராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமங்கலா, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,

டிரூஜன், ஜெனீசன், லினிஷா, பவிஷா ஆகியோரின் அப்பப்பாவும்,

காலஞ்சென்ற தர்மபாலச்சந்திரன் (அன்னப்பிள்ளை), ஜெயபாலன், றஞ்சனி ஆகியோரின் சகோதரரும்,

விஜகதா, தபோஜன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை மாலை 4:00 - 8:00 மணி வரை (இல-02, எவிட்டிகல மாவத்தை, கொழும்பு-08 இல் அமைந்துள்ள Supreme Funeral Directors) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-05-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 11-05-2025 ஞாயிற்றுகிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2025 04:00)