வைத்தியர். வைத்திலிங்கம் சிறீகாந்தா
(ஓய்வுநிலை தொற்றாநோய் மருத்துவ பணிப்பாளர், சுகாதார அமைச்சு இலங்கை)
தோற்றம்: 18 நவம்பர் 1939 - மறைவு: 15 மே 2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிறீகாந்தா அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருத்துவர் வைத்திலிங்கம் - தையல்நாயகி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் காசிநாதன் - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
கனகமலர் (ஓய்வுபெற்ற குழந்தை வைத்திய நிபுணர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பவகுகன் (ஐக்கிய இராச்சியம்), லக்ஷ்மி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சாந்தி, கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரன், அத்மொன், ஜெனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சிற்சபேசன், சர்வேஸ்வரன் மற்றும் விஜயலக்க்ஷ்மி, பூம்புகழேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 - 3.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 731 9769
www.tamilthakaval.org
