Mr. Vaithiyalingam Narendran

(மருதி டிரேடர்ஸ் (அரிசி), Old Moor Street, கொழும்பு-12)

Vaithiyalingam Narendran

Deceased: 09 October 2026

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.V. நரேந்திரன் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், தங்கோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியலிங்கம் - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பயிரிக்கூடல் ஆறுமுகம் கந்தையா - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மருமகனும்,

காலஞ்சென்ற வேதாரணியம்மா (வேதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரனின் (அவுஸ்திரேலியா) பாசமிகு தந்தையும்,

கமலேஸ்வரியின் மாமனாரும்,

திவிஷன், கவிஷன், சாஷினியின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பரமேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, மனோன்மணி, புவனேஸ்வரி, தேவகி (குஞ்சரி ஆசிரியை), வாழ்நாள் பேராசிரியர் S.V.பரமேஸ்வரன், குமரப்பா, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-10-2026 சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 914 8680

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 00:00)