திரு. வைத்தியலிங்கம்பிள்ளை பாலகுமார்

வைத்தியலிங்கம்பிள்ளை பாலகுமார்

மறைவு: 07 மார்ச் 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் புத்தினம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம்பிள்ளை பாலகுமார் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், கள்ளிக்குடி கிராமம் காலஞ்சென்றவர்களான கருப்பையாப்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

ஆனந்தவள்ளி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரிகுமாரின் (அருண்) பாசமிகு தந்தையும்,

மதுஷாலினியின் அன்பு மாமனாரும்,

புண்ணியமூர்த்தி (RMSR) - காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராமசந்திரன், அருணாச்சலம், சண்முகநாதன் மற்றும் ஜோதிகுமார் (இந்தியா), கனகாம்பிகை, நளாயினி (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,

கணேசமூர்த்தி (கண்ணன்), இலங்கேசன் (பாபு), தினகரன் (ரகு) ஆகியோரின் மாப்பிளையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கெரவலப்பிட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)