திரு. வைத்தியலிங்கம் கதிர்காமதாசன்

வைத்தியலிங்கம் கதிர்காமதாசன்

தோற்றம்: 29 அக்டோபர் 1931 - மறைவு: 28 ஆகஸ்ட் 2025

யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்தியலிங்கம் கதிர்காமதாசன் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் - பொன்னாம்பிகை தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற பண்டிதரப்பா வைத்திலிங்கம் - லட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்தியகுமார், நிர்மலகுமார், சாந்தகுமாரி, இந்திரகுமாரி, நந்தகுமார் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

கோமதி, வசந்தி, முருகவேல், குகேசன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசி, ரதினி, நிதர்ஷன், ராகவி, சண்முகன், மங்கையர்கரசி, சிவானந்தி, ரிஷிகேசன், தவசிகன், சசிக்குமரன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கார்த்திகேயன், கதிரவன், சேயோன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ஏகாம்பரதாசன், இராமநாததாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன், கனகாம்பிகை, அன்னபூரணியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சங்கரநாதன், கைலாசபதி, அமுதாம்பிகை, முருகவேல், அமுதாம்பிகை, வாலாம்பிகை, கருணாம்பிகை, சிவக்கொழுந்து, முத்துக்குமரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல்  ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2025 04:00)