Mr Vaithiyanatha Kurukkal Gnanasundara Sharma

Vaithiyanatha Kurukkal Gnanasundara Sharma

Deceased: 21 August 2026

யாழ் புத்தூர் ஞானவைரவகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவனும், ஆசிரியரும், கணித ஆசானும், கொழும்பு/ பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஓய்வு நிலை ஆசிரியரும் பிரம்மஸ்ரீ வைத்தியநாதகுருக்கள் ஞானசுந்தரசர்மா அவர்கள் இன்று 21-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ஸ்ரீமதி சகுந்தலா அவர்களின் கணவரும்,   

ஸ்ரீமதி  பிரசன்னா (Melbourne Australia), பிரம்மஸ்ரீ  தேமதுரன் (மது Sydney Australia) ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான புத்தூர் வைத்தியநாதக் குருக்கள் தம்பதிகளின் மகனும்,
 
சுன்னாகம் ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய ஸ்தானிக குரு காலஞ்சென்ற சபா சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் மருமகனும் ஆவார். 
 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். 
 
ஓம் சாந்தி. 
 
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.   

அன்னாரின இறுதிக்கிரியைகள் 23-08-2026ம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


 

தொடர்புகளுக்கு:

கண்ணன்: +44 795 633 7492

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2026 16:10)