திருமதி. வள்ளியம்மை சோமசுந்தரம்

வள்ளியம்மை சோமசுந்தரம்

தோற்றம்: 10 மார்ச் 1936 - மறைவு: 15 ஆகஸ்ட் 2024

யாழ். மீசாலையைச் சேர்ந்த வள்ளியம்மை சோமசுந்தரம் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை-தங்கம்மா தம்பதியினரின் மகளும், தம்பு-பாருப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுவர்ணா (இலங்கை), கிருஸ்யந்தன் (லண்டன்), விவேகானந்தன் (கனடா) , சிவநேசன் (மேலதிக பணிப்பாளர்-பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம் கிளிநொச்சி), சுகல்யா (இலங்கை), சுகுணா (கனடா), சுகிர்தா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிக்குமார் (இலங்கை), கெங்காதேவி (லண்டன்), வளர்மதி (கனடா), வனிதா (இலங்கை), யசோதரன் (KSY) (இலங்கை), காலஞ் சென்ற அருள் (கனடா), மற்றும் இராஜேந்திரன் (கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோன், மயூரி, நிசாந்தன், கிருசாந்தி-அருண், கிரிஜா, அர்ச்சனா, ஆராதனா- சுலக்‌ஷன், யதுசன், பிரணவி, இராகவி, ஸ்ரீகவி, அர்ச்சுன், அஸ்மிதா, ரிசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆர்யாவின் ஆசைப் பூட்டியுமாவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 00:59)