திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம்
(இளைப்பாறிய ஆசிரியை - விக்ரோறியக் கல்லூரி சுழிபுரம்)
தோற்றம்: 07 அக்டோபர் 1938 - மறைவு: 26 ஜூன் 2025
யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 26-06-2025 வியாழக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தோழர். கே.ஏ. சுப்பிரமணியம் (தொல்புரம் சத்தியமனை நூலகத்தின் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தோழர் சத்தியராஜன் (மீரான் மாஸ்ரர்), திருமதி. சத்தியமலர் ரவீந்திரன் (பபி), காலஞ்சென்ற நல்லநாதர் (RR), சத்தியகீர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா சின்னையா, காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற ஆசிரியை - கனடா), பொன்னையா (ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி - வவுனியா, இலண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னையா அப்புத்துரை (கொழும்பு), கனகாம்பிகை தர்மலிங்கம் (புத்தூர்), ஞானாம்பிகை மகேஸ்வரன் (சுழிபுரம்), சின்னையா பாலச்சந்திரன் (சுழிபுரம்) ஆகியோரின் சிறிய தாயாரும்,
Dr. வதனி பவகரன் (இலண்டன்), Dr. விசாகரன் (அமெரிக்கா), Dr. கிருபாகரன் (அமெரிக்கா), சுதாகரன் (அமெரிக்கா) ஆகியோரின் பெரிய தாயாரும்,
சோமஸ்கந்தன் (இலண்டன்), கரிதரன் (இலண்டன்), மகேஸ்வரி சத்தியராசன் (நோர்வே), Dr. நடேசன் இரவீந்திரன் (இலங்கை), Dr. சுசித்திரா சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமியும்,
சோலைராஜ் ஸ்ரீராம் (அமெரிக்கா), Dr. சுபாரா ஸ்ரீராம் (அமெரிக்கா), சுமண்யன் இரவீந்திரன் (கனடா), அரசி சுமண்யன் (கனடா), Dr. ஸ்ரீரஞ்சனி லியனகே (அவுஸ்திரேலியா), Dr. ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க பாட்டியும்,
ஸ்ரீராம் சாரவ், சுமண்யன் வியன், ஸ்ரீராம் சாயன், சுமண்யன் அகன், அஞ்சலி ஸ்கை லியனகே ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று தொல்புரத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
