Mrs. Vallinayagi Ponnambalam
Deceased: 07 January 2026
யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளிநாயகி பொன்னம்பலம் அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிறன்டி வேலுப்பிள்ளை - சிவபாக்கியம் (காரைநகர்) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
கல்கமுவா வேலுப்பிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை (காரைநகர் அறுகம்புலம்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன் (HNB Rtd), காலஞ்சென்ற சர்வானந்தன் (சுவீஸ்), தயானந்தன் (சுவிஸ்), சச்சிதானந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற விபுலானந்தன், கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விஜலட்சுமி, நகுலாம்பிகை (அமெரிக்கா), அரியரட்ணம் (Ariyartnam A.co) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, லோகநாதன் (ஐப்பான் ஜீவலரி), சிவகற்புகரசி ஆகியோரின் மைத்துனியும்,
பத்மசோதி, பதிசக்தி, கேமாலினி, சாந்தினி, ஞானவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், நிவேதிதா, ஜனகன், லேகாஜினி, அபிராமி, ராகவன், அச்சுதன், அயந்தன், ராகவன், சங்கவி, ஷரனி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
நரேன், ஆதிரன், ஆரியன், மீனாட்ச்சி, ஆராதி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி 3:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
