Mrs Vallippillai kanapathipillai

Vallippillai kanapathipillai

Date of Birth: 26 October 1934 - Deceased: 03 February 2024

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்  வவுனியா வைரவ புளியங்குளம் புகையிரத நிலைய வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை (தெய்வானை பொலிஸ் அன்ரி) அவர்கள் நேற்று 03-02-2024ம் திகதி சனிக்கிழமை காலமானார். 

அன்னார் காலஞ்செனெறவர்களான கந்தையா - சின்னாச்சி  அனபு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி -  சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், ஆறுமுகம், பேரம்பலம் மற்றும் பாக்கியம் (நோர்வே), குலசிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr. உதயகுமாரி (அவுஸ்ரேலியா), சூரியசெல்வன் (ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்), கேதீஸ்வரன் (நிலஅளவையாளர்), ஜெகதீஸ்வரன் (ஓய்வுநிலை முகாமையாளர் கணனி வளநிலையம்), புஸ்பகுமாரி (கனடா), Dr. சஞ்சீஸ்வரன் (Veterinary Surgeon) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
உமா (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்), லீலை உமை, நிரஞ்சினி (ஆசிரியை), சிறிதரன் (கனடா), அனுராதா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
பெஞ்சமின், கபின், நிலான், சோபி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
 
தபோசினி, சௌமியா, சரண்யா, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை 05-02-2024ம் திகதி திங்கட்கிழமை மதியம் 1:00 மணிக்கு  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 4:00 மணியளவில் தச்சனாங்குளம் இந்து  மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

விலாசம்:-
 
125/1,புகையிரத வீதி, 
வவுனியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2024 02:28)