திரு. வல்லிபுரம் அம்பலவாணதாதன்

(ஓய்வு பெற்ற ஆசிரியர்- புனித அந்தோனியார் கல்லூரி- ஊர்காவற்றுறை)

வல்லிபுரம் அம்பலவாணதாதன்

மறைவு: 15 நவம்பர் 2024

யாழ். ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடாவை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அம்பலவாணதாதன் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் அம்பலவாணர் வல்லிபுரம் (ஊர்காவற்றுறை) - சுந்தரலட்சுமி (வட்டுக்கோட்டை) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,

சாமிநாதன் (கனடா), சுந்தரலட்சுமி (கனடா), கைலைநாதன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லிங்கரட்ணம் (கனடா), யசோதரா (கனடா), சுசீக்கா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

சச்சின், சஷாங்கி, ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபினயா, ஹரிகரன், அஷ்சரா ஆகியோரின் அன்புமிகு பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான கருணைநாதன், குணாம்பிகை, ஞானாம்பிகை, சுகுணநாதன் மற்றும் புனிதாம்பிகை, அமிர்தாம்பிகை, நிமலநாதன், விமலாம்பிகை, விதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மணிவாசகம் மற்றும் செல்வரட்ணம், சந்திரிக்கா, கணேசன், அருளானந்தா, நந்தினி, கிருஷ்ணன், தயாளினி, சுஜாத்தா, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி. தர்மநாயகி, ஜெயரட்ணம், விஜெயலட்சுமி, யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2024 05:00)