திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
தோற்றம்: 29 ஜனவரி 1953 - மறைவு: 01 மே 2025
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - பஞ்சவர்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், குணரத்தினம் - காலஞ்சென்ற பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான குணலிங்கம், மாணிக்கலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும்
ஜீவிதன் (அவுஸ்திரேலியா), ஜினேஸ் (அவுஸ்திரேலியா), துளஷா (அவுஸ்திரேலியா), தர்ஷிகா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தா, செந்தூரன், ஷாம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேல்சிவானந்தம். அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநந்தன், உதயராணி,லலிதாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஏவா, ஐலா, அயானா, ரைலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
