திரு. வல்லிபுரம் கமலநாதன் (கண்ணன்)
(ஓய்வுபெற்ற அதிகாரி-இலங்கை கனியவள கூட்டுத்தாபனம்-புல்மோட்டை)
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1947 - மறைவு: 20 அக்டோபர் 2024
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கமலநாதன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-ராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகசிங்கம்-கனகேஸ்வரி (ஆச்சி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தாவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகேந்திரன், இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கஜரூபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவயோகநாதன் மற்றும் கணேசநாதன், சண்முகநாதமுதலி, சிறிபத்மநாதன், நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், குகேந்திரன், சுரேந்திரன், பிரியதர்ஷினி, சுமித்திரன், ரஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷயன், அக்ஷாஜினி, அக்சிதன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 26-10-2024 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணி தொடக்கம் மாலை 04:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 05:00 மணியளவில் கல்கசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
www.tamilthakaval.org
