திரு. வல்லிபுரம் ரவீந்திரன்

வல்லிபுரம் ரவீந்திரன்

தோற்றம்: 25 செப்டம்பர் 1976 - மறைவு: 25 ஜூன் 2024

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Noisy-le-sec - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் ரவீந்திரன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-அருளம்மா தம்பதியினர், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு சேனாதிராசா (அதிபர்) -தெய்வானை தம்பதியினர், காலஞ்சென்றவர்களான சண்முகம்-தங்கம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற வல்லிபுரம்-தங்கமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தனபாலன்-சுலோட்சானாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வாகிஸ்வரி (வாகினி) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வினன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலநாதன், கமலநாதன், மஞ்சுளா, அமுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன், சிவநாதன், திலிபன் ஆகியோரின் மைத்துனரும்,

சுதாஜினி அவர்களின் சகலனும்,

சாந்தலிங்கம்-புஸ்பராணி தம்பதியினரின் பெறாமகனும்,

தர்சிகன், கபிஷா, விதுஷ், டயானி, டெனிஷா, பிரணவி, ஆரியா, நவினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவினா, கயல்விழி ஆகியோரின் அண்ணாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 27-06-2024 வியாழக்கிழமை, 29-06-2024 சனிக்கிழமை, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) என்ற முகவரியில் வைக்கப்பட்டு, 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.25 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 04:00)