Mr. Vallipuram Thirunavukkarasu
(நவசமசமாஜ கட்சி அரசியல் குழு உறுப்பினர், முன்னாள் கொழும்பு மாநகர சபை அங்கத்துவர்)
Deceased: 31 October 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காாலஞ்சென்ற வல்லிபுரம் - சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற கணபதி - அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, ஜெயராசா, ஆனந்தராசா, குணசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
இராஜகுமார், விஜயகுமார், வாசுகி, துளசி, திருவேணி, கேதீசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
கமலினி, ஜெயமதி, லிங்கேஸ்வரன், பத்மநாதன், ரஞ்சன், ருக்ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகா, ரெபிக்கா, சஷ்டிகா, டினுசன், மஹிஷா, ஆகாஷ், அஜந்தி, மணிகண்டன், சாதனா, லவண்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-11-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
