திருமதி. வள்ளியம்மா வௌ்ளக்குட்டியாப்பிள்ளை
மறைவு: 20 மே 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் N.புதுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், ஹேவாஹெட்ட புட்டுவெலயை பிறப்பிடமாகவும், பனிய விஹாகரலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மா வௌ்ளக்குட்டியாப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று 9.30 - 10.30 மணியளவில் பெரகல களுபானையில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன்பிள்ளை - மூக்காய் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கருப்பண்ணம்பிள்ளை - மாரியாயி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற வௌ்ளக்குட்டியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பையாப்பிள்ளை, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மூக்கையாப்பிள்ளை அவர்களின் மைத்துனியும்,
கனகராஜ் (பெரகல), காலஞ்சென்றவர்களான செல்வராஜ் (கொழும்பு), யோகராஜ் (ஹப்புத்தளை) மற்றும் சீதாலெட்சுமி (ஹேவாஹெட்ட), பாலசுப்பிரமணியம் (கொழும்பு), ஜெகநாதன் (The Pearl Selection - ஹப்புத்தளை), உதயகுமார், புஸ்பராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமசிவம்பிள்ளை (திலகம்ஸ் - ஹேவாஹெட்ட), புஷ்பவதி, கலாரஞ்சனி, மகேஸ்வரி, யோகேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,
ராமசாமிபிள்ளை - மூக்காய் (பனிய விஹாகரகலை), முத்துசாமிபிள்ளை - விசாலாட்சி (கலஹா), வேலாயுதம்பிள்ளை - நாகம்மா (ஹப்புத்தளை), சப்பாணிப்பிள்ளை - பழனியம்மாள் (பனிய விஹாகரகலை), மாரிமுத்துபிள்ளை - தனலெட்சுமி (டயகம), சப்பாணியாம்பிள்ளை - மூக்காயி (ஹேவாஹெட்ட) ஆகியோரின் சம்பந்தியும்,
சசிகலா, சகுந்தலா, சதீஷ், சிந்துஜா, மனோபிரியா, துஷாந்தன், திலுக்ஷன், கபிக்ஷன், அபிக்ஷன்யா, சுவாதி, சஜீவன், கிஷான், சவிதாஷினி, சஸ்மிதா, தினுர்ஷன் ஆகியோரின் அப்பாயியும்,
மல்லிகா, மேகலா, தர்ஷினி, சுதர்ஷன் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் (இல-107 B , ஜனஉதான கம்மாள, களுப்பான, பெரகலை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் ஹல்தும்முல்லை பிரதேசசபை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
