திருமதி. வள்ளியம்மை பேரம்பலம்

வள்ளியம்மை பேரம்பலம்

தோற்றம்: 02 ஏப்ரல் 1929 - மறைவு: 02 ஏப்ரல் 2025

யாழ். அனலைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் மற்றும் கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை பேரம்பலம் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பழனி, தில்லைநாதன், தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, பொன்னுவா, தம்பையா, கதிரவேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலாம்பிகை, ஆனந்தன் மற்றும் நாகேஸ்வரி, வாமதேவன், தட்சணாமூர்த்தி, லிங்கேஸ்வரன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், இராசரத்தினம் மற்றும் விஜயலட்சுமி, தமயந்தி, தழிழ்செல்வி, புனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிகலா, சுசிகலா, சதீஸ்குமார், செந்தூரன், மோகனராஜன், தயாளன், பிரியதர்சினி, நிமலன், உதயதர்சினி, அகிலன், யசிந்தன், துவாரகா, கிறிஸ்னி, பானுசா, துசன், ராகுலன், சுபீரன், கேபிதா, வைஸ்ணவி, விதுசன், ஜஸ்ணவி, கண்ணன், யசோதரன், அனுசா, சுகந்தா, சுகந்தினி, கைலேஸ்வரி, ஜெயகுமார், நிஷாந்தினி, ஜஸ்ரின், பிலோஜினி, சதீஸ், நிசான், டிலக்சனா, நிதிஸா, வினோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜானன், கீர்த்தனா, அருண், பிரியா, பைரவி, ராகவி, துசித்தா, துசன், தேனுசா, யாழவன், கஜிதா, கனிதா, மிதுனாளினி, கேசவன், கிஷாந், கபிஷயா, அஸ்நவி, கஜீத், அனென்யா, பிரகாஸ், ஆகாஸ், தனுஸ், ஆரியா, கவிஷா, இசை, ஓவியா, வருண், அஜேய், நிலான், மைலியா, அனேயா, அலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-04-2025 ஞாயிற்றுக்கிமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 07-04-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2025 04:00)