Mr. Vamanan Balachandran
Date of Birth: 16 August 2001 - Deceased: 24 May 2024
கொழும்பு -13 ஆட்டுப்பட்டி தெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட திரு. பாலச்சந்திரன் வாமணன் அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலச்சந்திரன்- சந்திரவதி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை- ருக்குமணி, காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை- பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு பேரனும்,
வினித்ரா, அனித்ரா, டினிஷா, வினித்திரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பஸ்ஸூன், பிரபோஸ், விரிசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிக்ரா, அப்துல் அஸீஸ், இலக்கியா, மலரவன், அகல்யா, ரித்விஷா ஆகியோரின் அன்பு குட்டி மாமாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 25-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஶ்ரீ ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
