திரு. வாமதேவா ரவிசங்கர்

வாமதேவா ரவிசங்கர்

தோற்றம்: 28 ஜனவரி 1968 - மறைவு: 02 ஜூன் 2025

இலங்கையின் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் தற்சமயம் ரூமேனியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தவருமாகிய திரு. ரவிசங்கர் வாமதேவா அவர்கள்  02-06-2025ம் திகதி ஜூன் மாதம் திங்கட்கிழமை ரூமேனியாவில் காலமானார்.

 

எப்போதும் கூட இருப்பவர்களை சிரித்த முகத்துடன்  நகைச்சுவாயாக பேசி தொலைபேசியினுடாக தொலைவில் இருப்பவர்களையும் சிரிக்க வைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறும் நீங்கள் எங்கே காணமற் போய்விட்டீர்கள் அண்ணா! 

1990 களில் வீதியால் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது உங்களை அன்றைய நைற் ரைடர் நிகழ்ச்சி (மைக்கல்) என்றும் பிறேக் டான்ஸர் என்றும் உங்கள் அழகையும் நடனத் திறமையையும் பலரும் புகழ்ந்ததை எப்படி மறக்க முடியுமா அண்ணா! 

உங்கள் இழப்பு செய்தி அறிந்த தங்களின் தாயார் நீராகரமோ உணவின்றிஅழுது புலம்புகிறாரே அவருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென புரியாமல் தவிக்கிறோமே அண்ணா 

தங்களின் திடீர் மறைவினை உங்கள் அன்புத் தம்பியாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் வருந்துகிறாரே அண்ணா! 

உங்கள் ஆசை மனைவியையும் அன்புக் குழந்தைகளையும் விட்டு தொலைவில் காணாத இடத்துக்கு போய்விட்டீர்களே அண்ணா! 

அப்பா எப்போது வருவாரென கேட்கும் பிஞ்சு உள்ளங்களுக்கு நாம் என்னதான் பதிலை சொல்லமுடியும் அண்ணா! 

உங்கள் பிரிவினால் துயரும் உடன் பிறவா சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்கள்.

 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2025 04:50)