Mrs. Vanathi Pradeepkumar
Date of Birth: 08 June 1975 - Deceased: 06 September 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வானதி பிரதீப்குமார் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராஜா - மஞ்சுளா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
அலோசியஸ் ஆனந்தராஜா - சிவகங்கை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பிரதீப்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியப்பிரியா, யதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அகிலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன் (பிரித்தானியா), சுதந்தன் (பிரித்தானியா), றோகன்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஷி (பிரித்தானியா), வினுஷா (பிரித்தானிாய), கார்த்திகா (ஆசிரியை), தர்சினி, சுபாசினி, டிலக்ஷனா, கவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தியகாந், கிருத்திக்,ஷியன்னா, விதுன், நிதுனா, லதுஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலா (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயந்தி, வசந்தி (பிரான்ஸ்), தாரணி, பாமினி ஆகியோரின் பெறாமகளும்,
சிவந்திரனின் (பிரான்ஸ்) மருமகளும்,
ஆறுமுகநாத், இரட்ணநாத், யோகநாத், ராசிலா, லாமிர் கோபிகா, கஜமுகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இல- 19 கனகரத்தினம் வீதி, அரியாலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 03.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
