திருமதி. வானதி அயந்தன்
தோற்றம்: 24 ஏப்ரல் 1997 - மறைவு: 20 டிசம்பர் 2025
யாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பூர்வீகமாகவும், கனடா - Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வானதி அயந்தன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா (பொலிசர்) - மீனாட்சிப்பிள்ளை தம்பதியர், நவரத்தினம் - நவபாக்கியம் தம்பதியரின் அன்புப் பேத்தியும்,
சிவானந்தன் - ரதி தம்பதியினரின் மகளும்,
அரியபுத்திரன் அருணன் - செல்வி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அயந்தன் அவர்களின் மனைவியும்,
அருண் சிவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரியா (பிரித்தானியா), அஷ்வினி (அவுஸ்திரேலியா), வேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகு - சசிகலா (பிரித்தானியா), ரவி - அவந்திகா (பிரித்தானியா) ஆகியோரின் மருமகளும்,
சிவமகேந்திரன்- சாருலதா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தனுர்தன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-12-2025 காலை 8:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
