Mrs. Vanniyasingham Parameswary
Date of Birth: 03 April 1938 - Deceased: 18 August 2024
ஜெங்கரா ஊர் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கறுவல் புளியங்குளம், பூந்தோட்டம் மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வன்னியசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பு-பொன்னி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுகுமார், ஜெயக்குமார், ரவிக்குமாரி (சாந்தினி) மற்றும் விஜயகுமாரி, ராஜகுமாரன், உதயகுமார், வசந்தகுமார், சிவகுமாரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்களேஸ்வரன், தவராசபுத்திரி, சிவஞானதேவி, கலாறஞ்சினி, சுஜிவினி, கவித்திரா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தங்கராஜா மற்றும் மலர், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, வீரபாகு ஆகியோரின் மைத்துனியும்,
லாவணியா, ஜனனி, கீர்த்தனா, ஹரணியா, சுவர்ணியா, யதூரி, மகிஷா, விதுஷன், கார்த்திகன், சங்கீத், சர்வீன், சஞ்ஜெய், சியாம், ஜதூஷன், வேதீசன், ஷகீசன், சஜெய், சச்சின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மீரா, மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-08-2024 புதன்கிழமை அன்று மாலை 4.00-8.00 மணி வரையும் Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-08-2024 வியாழக்கிழமை காலை 9.30-12.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
