திருமதி வரராஜசிங்கம் பத்மாவதி

(ஓய்வுநிலை ஆசிரியை யாழ் யூனியன் கல்லூரி மற்றும் வவு தமிழ் மத்திய மாகாவித்தியாலயம்)

வரராஜசிங்கம் பத்மாவதி

தோற்றம்: 27 ஜூன் 1950 - மறைவு: 12 ஜூன் 2025

யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர் திருமதி. வரராஜசிங்கம் பத்மாவதி அவர்கள் 12.06.2025 அன்று தெல்லிப்பழையில் தனது 75 ஆவது வயதில் இறைபதமடைந்தார்.

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் புகையிரத நிலைய வீதி தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட பணி நெறியிலே உயர்ந்த அடையாளம் வகித்த, அன்பு மனைவி, தாய், சகோதரி, மைத்துனி, ஆசிரியை, வழிகாட்டயான அன்னார்,
காலஞ்சென்ற கந்தசாமி - செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவன், சிறந்த கால்பந்தாட்ட வீரர், கல்லூரியின் பற்காலத்தின்போது தய்சங்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றிய மா. வரராஜசிங்கத்தின் பாசமிகு மனைவியும்,
 
கோகுலன், ஹரிராம்ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பா. சரோஜினிதேவி, க. பத்மநாதன், காலஞ்சென்றவர்களான க. சத்தியநாதன், வே. சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மா. தில்லையம்பலம், திருமதி சி. சுகன்யா, திருமதி கு. தேவரஞ்சா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.06.2025 இன்று வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் மு.ப. 10 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலை சைவ மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும் எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
 
 தகவல்:- குடும்பத்தினர்.
 
புகையிரத நிலைய வீதி, தெல்லிப்பழை.
ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2025 22:45)