திருமதி. வரதராசா புஷ்பமலர் (கிளி)
மறைவு: 18 பெப்ரவரி 2026
முல்லைத்தீவு - முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதராசா புஷ்பமலர் அவர்கள் 18-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - நல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராசா (ஓய்வுபெற்ற கோட்டைக்கல்வி பணிப்பாளர், வவுனியா வடக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ரேவதி, தேவராசா மற்றும் சிவமதி பத்மராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் பத்தன், வடிவேலு, இராசகோபால் ஆகியோரின் மைத்துனியும்,
நந்தகுமார் (ஜேர்மனி), கல்யாணி (பிரான்ஸ்), செந்தூரன் (பிரான்ஸ்), குகாஜினி (முன்னாள் கிராம உத்தியோகத்தர், இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
விஜிதேவி, மணிமாறன், மதுபிரியா, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இளவரசு, கயலரசு, பிறையரசு, வினோஸ், அபிஷேக், அட்சயா, யாழருவி, சங்கீர்த்தனா, ஹன்சிகா, ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அனனாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கற்பூரப்புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
