Mr. Varedran Kandiah
Date of Birth: 15 August 1960 - Deceased: 20 November 2024
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரேந்திரன் கந்தையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-பாக்கியலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திருவேங்கடம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சசிரேகா (கிளி- காரைநகர் வலந்தலை) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், சிந்துஷா மற்றும் காலஞ்சென்ற வானுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெசிக்கா, லவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விக்ரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், புஷ்பராணி (கனடா), குலேந்திரன்-நிலோசனா (பிரான்ஸ்), ரஞ்சினிதேவி-கனகராஜா (பிரான்ஸ்), ரஜனிதேவி- சந்திரகாந்தன் (பிரான்ஸ்), ரமணிதேவி-ஞானேஸ்வரன் (ஜேர்மனி), விமலேந்திரன்-வினோதினி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி-காலஞ்சென்ற சிவலிங்கம், வனிதாதேவி-குஞ்சிதபாதம், அரியமலர்- யோகேஸ்வரன், சுலோஜனா-காலஞ்சென்ற விபுலானந்தன், சந்திரசோதி-சித்திரா, வசந்தா-ரொபர்ட், சாந்தா-சுத்தானந்தன், ஸ்ரீலதா-மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2024 அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-11-2024 திங்கட்கிழமை காலை 9:00-10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
