Mrs. Vasantha Somasundaram (Vasanthi)

Vasantha Somasundaram (Vasanthi)

Deceased: 23 August 2024

கொட்டாஞ்சேனை, மேஃபீல் வீதியை வசிப்பிடமாக கொண்ட திருமதி. வசந்தா சோமசுந்தரம் அவர்கள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இரவு 7.55 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்தியா-திருச்சி மாவட்டம் தெற்குச்சிறுப்பத்தூர் கிராமம் காலஞ்சென்ற மூக்கப்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மகளும்,

திருநெல்வேலி மாவட்டம் கொம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிவிஸ்வநாதன்பிள்ளை-சங்கரவடிவு அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா, அபினேஷ் ஆகியோரனி் தாயாரும்,

கீதா, சுமித்ரா, பிரமிளா, திலீபன், ரமேஷ் ஆகியோரின் சித்தியும்,

பெரியசாமிப்பிள்ளை, காலஞ்சென்ற காமாட்சியம்மாள், ராஜம்மாள், ருக்மணி, மாரியாப்பிள்ளை (நடராஜா), கனகரட்ணம், காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

சாம், சதுர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,

துரைசாமி சத்தியவதி தம்பதியினரின் சம்மந்தியும்,

ஜெய், சஞ்சனா, கிருத்திகா, சுபிக்‌ஷா, சஞ்ஜெய், சஞ்ஜீவ் ,கௌசிகன், ரிஸ்மிதா ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 24-08-2024 மாலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-08-2024 காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2024 04:00)