Mrs. Vasantha Sundarraj

Vasantha Sundarraj

Deceased: 16 October 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் வளமுடையான் கோத்திரம் மருதம்பட்டி கிராமம் திருமதி. வசந்தா சுந்தர்ராஜ் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற (உடிஸ்பத்துவை) பெரியசாமிபிள்ளை-பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

மாரியாப்பிள்ளை-அரவாத்தா தம்பதியினரின் அன்பு மருகளும்,

காலஞ்சென்ற சுந்தர்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மதர்ஷனி (சுகி/தர்ஷ்- Transgate Express Pvt Ltd) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வௌ்ளையம்மாள் (வசந்தா), சப்பாணிப்பிள்ளை, விஸ்வநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் சண்முகநாதன், சுசிலா, சுலோ, இலங்கேஸ்வரி, பரமேஸ்வரி (சசி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற சதாசிவம், சச்சிதானந்தன், ஜெகநாதன் ஆகியோரின் மைத்துனியும்

காலஞ்சென்ற மனோரஞ்சிதம், மல்லிகா சுந்தரம், புனிதம், மனோன்மணி ஆகியோரின் நாத்தனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 17-10-2024 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.10 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2024 04:00)