திருமதி. வசந்தகுமாரி இரத்தினசிங்கம்

வசந்தகுமாரி இரத்தினசிங்கம்

தோற்றம்: 27 ஏப்ரல் 1950 - மறைவு: 21 பெப்ரவரி 2025

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதி சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் - செல்லம்மா (முள்ளியவளை) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், 

மூர்த்தி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரா (கனடா), செல்வன், விதுனன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராகுலன் (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

வஸ்மிகா, கிரிஷ்னிக்கா (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

செல்வராஜா (முள்ளியவளை), முல்லை ஜெயராசா (ஜேர்மனி), சிவராசா (பிரான்ஸ்), வரதராஜா (சுவிஸ்), சாந்தகுமாரி கமலகாந்தன் (முள்ளியவளை), ஜீவராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவா (முள்ளியவளை), செல்வராணி (ஜேர்மனி), புஷ்பராணி (ஜேர்மனி), துஷாந்தி (சுவிஸ்), கமலகாந்தன் (முள்ளியவளை), ஜாமினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலாம்பிகை (கனடா), தர்மகுலசிங்கம் (டென்மார்க்), சிவராஜசிங்கம் (சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரன், நகுலேஸ்வரி (டென்மார்க்), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2025 திங்கட்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-02-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 2:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2025 05:00)