Mrs. Vasuthevan Rajalaxumy (Santhi)

Vasuthevan Rajalaxumy (Santhi)

Date of Birth: 04 December 1967 - Deceased: 14 March 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை - ஶ்ரீ விஜயா ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுதேவன் ராஜலட்சுமி அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வாசுதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகரனின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரலதாவின் தங்கையும்,

தர்மராஜா, யோகராஜா ஆகியோரின் சகோதரியும்,

வரதராஜா, ராஜசேகர், வாமதேவன் வசந்தகுமாரி மற்றும் வனஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 04:00)