Mrs. Vathani Selvakumar

Vathani Selvakumar

Deceased: 16 June 2025

யாழ். கரவெட்டி மேற்கு விக்னேஸ்வராக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனி செல்வகுமார் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்வகுமார் அவர்களின் (இலங்கை மின்சாரசபை ஊழியர்) அன்பு மனைவியும்,

கபில்நாத்தின் (சிவில் அத்தியட்சகர் - இலங்கை மின்சாரசபை) அன்புத் தாயாரும்,

நிவேதிகாவின் அன்பு மாமியாரும்,

சாந்தினி, ஞானதாஸ் (இலண்டன்), யோகதாஸ் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவதாஸ், ரமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருஞானசுந்தரம், வசந்தி (இலண்டன்), புவனவேணி (ஜேர்மனி), வீரவாகு (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2025 04:00)