திருமதி. வத்சலா பிரபாகரன்
தோற்றம்: 13 நவம்பர் 1959 - மறைவு: 05 நவம்பர் 2021
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வத்சலா பிரபாகரன் அவர்கள் 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதபிள்ளை சிவசோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
திரு. திருமதி. கோபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாம், சிவந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராதாமோகன் மற்றும் வசந்தகுமாரி (ஐக்கிய அமெரிக்கா), இமாசலகுமாரி (இலங்கை), மோகனகுமாரி (அவுஸ்திரேலியா), ராஜராம்மோகன் (இலங்கை), விஜயகுமாரி (இலங்கை), உதயகுமாரி (இலங்கை), இரவிசந்திரமோகன் (இலங்கை), ராஜ்மோகன் (அவுஸ்திரேலியா), சிவகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வசந்தி ராதாமோகன், காலஞ்சென்ற ராஜநாதன், வில்வமங்கள் (இலங்கை), பிரபாகரன் (அவுஸ்திரேலியா), நயேமி (இலங்கை), தவசிலிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன், இரவிச்சந்திரிகா (இலங்கை), மேனகா (அவுஸ்திரேலியா), வசந்தகுமாரி இராஜேந்திரா (பிரித்தானியா), தயாவதனி குணரத்தினம் (அவுஸ்திரேலியா), சிவலோசனி மனோகரன் (பிரித்தானியா), ஸ்ரீதரன் கோபாலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
