Mr. Vayiravapillai Selvaratnam

(செல்வம் பிரதர்ஸ் கடை- உரிமையாளர்)

Vayiravapillai Selvaratnam

Date of Birth: 14 April 1944 - Deceased: 27 December 2024

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வயிரவபிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரவபிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

அருள்வாணி (இலண்டன்), சிவசங்கரன் (இலண்டன்), சிந்து (இலங்கை வங்கி-மன்னார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரதன் (இலண்டன்), தனஞ்செயன் (தேசிய நீர் வடிகாலமைப்பு சபை - வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோரஞ்சிதம் (கனடா), யோகேஸ்வரி (கனடா), பவளமணி, இராசேந்திரம், காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, திருநாவுக்கரசு, மகாலிங்கம் மற்றும் சோதிமலர், செல்வராணி, காலஞ்சென்ற குமாரலிங்கம், கனகலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

விதுன், ரோஷ்ணவி (இலண்டன்), அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2024 05:00)