திரு. வே.க.பரம்சோதி
(ஓய்வுநிலை கொத்தணி அதிபர் [பூநகரி])
மறைவு: 08 ஏப்ரல் 2026
யாழ். புங்குடுதீவு கிழக்கு11ம் வடடாரத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கிளிநொச்சி, முரசுமோட்டை ஆகிய இடங்களில் வசித்தவரும், தற்போது பிராம்டன் - கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திரு வே.க.பரம்சோதி அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா மாரிமுத்து தம்பதியினரின் அருமைப்புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. தம்பிப்பிள்ளை - யேகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மங்களாம்பாள் (முன்னாள் ஆசிரியை - முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி) அவர்களின் அருமைக் கணவரும்,
ஜெயசங்கர், ஜெயகுமார், ஜெயசேகர், ஜெயசுந்தர், ஜெயமலர், ஜெயவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷ்யந்தினி, டுஷ்யந்தி, ஜீவலதா, நளாயினி, சிறிகுமாரன், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சினேகா, ஷ்ரேகா, கிஷாந்தி, கிஷான், மிதுணன், மதுமிதா, யாதவ், ப்ரணவ், ஆர்த்திகா, பூமிகா, மிவீன், மிவீஷா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான வே. க. நாகராசா, வே. க. பாலசிங்கம் மற்றும் Dr. வே.க. ஆனந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, பத்மநாதன், மங்கையர்க்கரசி, மகேஸ்வரி மற்றும் மரகதவல்லி, இலங்கநாதன், பர்வதவர்த்தினி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, உலகநாயகி, ஜானகிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 10:00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
