திருமதி. வீரகத்திப்பிள்ளை கனகம்மா

வீரகத்திப்பிள்ளை கனகம்மா

தோற்றம்: 28 ஜூன் 1931 - மறைவு: 07 பெப்ரவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரகத்திப்பிள்ளை கனகம்மா அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராணி, பவானந்ததேவி (Retired Daycare Teacher), விக்ரமராஜா (பிரதி பணிப்பாளர் நாயகம் நிர்வாகம்), காலஞ்சென்ற சகாதேவன், சந்திரா, எதிர்வீரசிங்கம், காசிநாதன், சிவகுருநாதன், கெங்காதரன், பத்மநாதன், மகேந்திரராசா, தரன் (Cha lus saigon பணிப்பாளர்), ஸ்ரீ(கிராம சேவையாளர்), Dr. சண்முகராஜா (வைத்திய கலாநிதி), ஸ்ரீவதனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம், ஒல்கா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், புஸ்பராணி, யோகேஸ்வரி, இதயராதா, ஜெயமதி, மதிவதனி, மாலா, மாலினி, ரேணு, ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவிரதன், தர்ஷினி, திசைரதன், சபீஷினி, ரோஷினி, கிருஷான், சங்கீதா, நிரஞ்சன், சலா, மைதிலி, தர்ஷினி, ரஜீவன், சாரூன், சாருஜா, சிவசங்கர், அஸ்வினி, ரதிகா, கரிஸ், ஜாக்லின், பாரத், பார்கவி, யாதவி, நிலவன், கானகன், தமிழ்செல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Yakshini, Yakshvin, Navena, Akurange, mithusan, vithusan, saasveekan, thuvaragan, Ilakya, Raksika, Rayden, Levine, Vithiya, Vishwa, Kabishan, Kanushan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-02-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-02-2025 முற்பகல் செவ்வாய்க்கிழமை காலை 10:30 - 1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2025 05:00)