திரு. வீரகத்தி வரதலிங்கம்
மறைவு: 23 மார்ச் 2025
யாழ். புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி் வரதலிங்கம் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வீரகத்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி காசியர் தம்பதிகளின் மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வச்சந்திரன் (செல்வம் - ஹொலண்ட்), ரஜனி (கனடா), செல்வமோகன் (மோகன் - இலங்கை மோகன் கடை), செல்வக்குமார் (மாவீரர் றொக்கி), செல்வறஞ்சன் (ரஞ்சு - கனடா), செல்வமகிந்தன் (மகிந்தன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமாவதி, நவீந்திரராசா, மஞ்சுளா, வாணி, சபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, இராசம்மா, மகாலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவரகளான நடராசா, பகவதி, மாணிக்கம் மற்றும் நாகம்மா, சிவசோதி (சோதி -மத்திய முன்பள்ளி தலைவர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷி, அபி, ஆதிசன், சஜிரன், சஜிரா, யதுஷா, ஜினோஜன், ஓவியா, அபிலாஷ், மிலோஷன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
VISITATION:-
Sunday,March 30, 2025 From [5:00 PM to 9:00 PM]
Monday March 31, 2025 From [12:30 PM to 1:30 PM]
FUNERAL SERVICE:-
Monday March 31, 2025 From [1:30 PM to 3:30 PM]
@
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1.
CREMATION & WITNESSING:-
Monday March 31, 2025 From [ 4:00 PM]
@
North Toronto Crematorium Inc
2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
