Mr. Veerakathy Natarajah

(ஓய்வு பெற்ற அதிபர்)

Veerakathy Natarajah

Date of Birth: 04 October 1936 - Deceased: 16 September 2024

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு, கிழவித் தோட்டப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கு காளியமூலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி நடராஜா அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வீரகத்தி-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், 

பரமேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆசிரியை-நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன் (கனடா), தயாபரன் (அமெரிக்கா), கலாஜினி (கொழும்பு இராமகிருஷ்ண வித்தியாலயம்), பிரியதர்ஷினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி (கனடா), சுதாஜினி (அமெரிக்கா), சிவகுமார் (பிரதி பணிப்பாளர் நாயகம்-மத்திய சுற்றாடல் அதிகார சபை) செல்வேந்திரமூர்த்தி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபியா, ஜஷன், லவீனியா, லஷாலி, மனோஜன், ஆரணி, மாதங்கி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு சகோதரனும்,

பாலச்சந்திரன் (இலண்டன்) காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பாலசிங்கம், யோகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 20-09-2024 வெள்ளிக்கிழமை முதல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நுணாவில் மேற்கு காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

24, காளியாமுலை வீதி,

நுணாவில் மேற்கு, சாவகச்சேரி.

தகவல்:- குடும்பத்தினர்  

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2024 04:00)