Mr. Veerakathy Sundaralingam
Date of Birth: 28 December 1946 - Deceased: 18 August 2026
யாழ் புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று 18-08-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார்; வீரகத்தி, சோதியின் மகனும், செல்லப்பா, செல்வராசுவின் மருமகனும்,
அருந்ததியின் அன்புக் கணவரும்,
பிரதீபா, பிரதீபன், கார்த்திகா, வாகீசனின் பாசமிகு தந்தையும்,
காலம்சென்ற வரதலிங்கம், மருதலிங்கம், அப்புத்துரை, நாச்சிப்பிள்ளை, சிவலிங்கம், மகாலிங்கம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவராணி, அருந்தவராசா, சாவித்திரி ஆகியோரின் மைத்துனரும்,
சிவகுமார், தயாநிதி, ஜீவகுமார், தீபா ஆகியோரின் மாமனாரும்,
திருவருண், சாத்வீகன், கவிவர்ணன், ஆருஷா, கனிஷ்க் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இறுதிக் கிரிகைகள் 19/Aug/2026 காலை 10.30 மணியளவில் அச்சுவேலியில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2026 14:44)
