திரு. வீரபத்திரன் (சாமி) ஹரிஹரன்
(Garnet Enterprise, Bhaghavan Traders - Proipertor)
மறைவு: 21 நவம்பர் 2025
கொழும்பு - கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரன் ஹரிஹரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரன் பாலையத்தேவர் - திருக்கமலம் தம்பதியினரின் ஏக புதல்வரும்,
தனேஸ்வரி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சற்குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன், வைஷ்ணவி, முகுந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அஷ்வினி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்விதா, நயினிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவானந்தலிங்கம் - கலாரஞ்சனி, ராஜலிங்கம் - காலஞ்சென்ற ராஜலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
சகவானந்தன் - சரோஜா, நாகரத்தினம் - அருள்மகன், மயில்வாகனம் - இந்திராணி, காலஞ்சென்ற குமாரசாமி - தங்கம்மா, காலஞ்சென்ற நாகேஸ்வரி - பீதாம்பரம், பரமேஸ்வரி - பாலச்சந்திரன், புவனேஸ்வரி - கனகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-11-2025 சனிக்கிழமை முதல் 24-11-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை (இல- 46, முத்துவெல்ல மாவத்தை, கொழும்பு-15) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
