Mr. Veerapathiran Hariharan

(Garnet Enterprise, Bhaghavan Traders - Proipertor)

Veerapathiran Hariharan

Deceased: 21 November 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரன் ஹரிஹரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரன் பாலையத்தேவர் - திருக்கமலம் தம்பதியினரின் ஏக புதல்வரும், 

தனேஸ்வரி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சற்குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், வைஷ்ணவி, முகுந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அஷ்வினி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்விதா, நயினிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சிவானந்தலிங்கம் - கலாரஞ்சனி, ராஜலிங்கம் - காலஞ்சென்ற ராஜலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

சகவானந்தன் - சரோஜா, நாகரத்தினம் - அருள்மகன், மயில்வாகனம் - இந்திராணி, காலஞ்சென்ற குமாரசாமி - தங்கம்மா, காலஞ்சென்ற நாகேஸ்வரி - பீதாம்பரம், பரமேஸ்வரி - பாலச்சந்திரன், புவனேஸ்வரி - கனகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-11-2025 சனிக்கிழமை முதல் 24-11-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை (இல- 46, முத்துவெல்ல மாவத்தை, கொழும்பு-15) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:00)