திரு. வீரப்பன் சுப்பிரமணியம் கவுண்டர்
(உரிமையாளர் - பொகந்தலாவ கலப்பை கடை)
தோற்றம்: 23 மே 1942 - மறைவு: 06 மே 2025
நுவரெலியா - பொகந்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. வீரப்பன் சுப்பிரமணியம் கவுண்டர் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காளியம்மா அவர்களின் அன்புத் தந்தையும்,
சங்கர், கலாவண்ணன் (ஆசிரியர் - ஹட்டன் ஹைலண்ட்ன்ஸ் கல்லூரி), மேனகா (ஆசிரியை - சென்மேரிஸ் ஆரம்பப்பிரிவு, பொகந்தலாவ), இந்திரகாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷாந்தினி, பத்மலோஜினி (ஆசிரியை - சென்மேரிஸ் கல்லூரி, பொகந்தலாவ), லெட்சுமகுமார், ஆனந்தன் ஆகியோரின் மாமனாரும்,
ரதீஸ், அபினிஸியா, அவிஸ்கர், தக்சன், சஜீவன், வனிஷா, அருனியா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-05-2025 வியாழக்கிழமை இல-14/2, சிறிபுர இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
