திருமதி. வீரசிங்கம் மகேஸ்வரி (மணி அக்கா)
தோற்றம்: 05 மே 1945 - மறைவு: 24 பெப்ரவரி 2025
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வைத்திலிங்கம் வீதி, ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிறேசம்மா (குஞ்சு), மனோன்மணி (வேவி), லோகேஸ்வரி (கிளி) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சந்திரபோஸ் (சந்திரன்), திலகவதி (பவளம்) மற்றும் புனிதவதி (மணி), பரராஜசிங்கம் (பரா-லண்டன்), ரவிக்குமார் (குமார்-இலண்டன்), விஜயகுமார் (விசி) ஆகியோரின் மைத்துனியும்,
சதீஸ்குமார் (சதீஸ்-வெல்டிங் தொழிலகம், KKS றோட்), சகிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தா, சுஜிதா ஆகியோரின் மாமியாரும்,
பிரவீனா, டக்சயா, சஞ்சனா, சஞ்சய் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 11.00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
வைத்திலிங்கம் வீதி,
ஆறுகால் மடம்,
யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
