Mrs. Veeravagu Ramani
Deceased: 04 August 2024
யாழ். தேனாவளவு கரணவாய் கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. வீரவாகு ரமணி அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீரவாகு (யப்பான் வீட்டு கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
பொன்னையா மாணிக்கம் தம்பதியினரின்ன் அன்பு மருமகளும்,
சாந்தினி, ஞானதாஸ், வதனி, யோகதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சரஸ்வதி, இராமநாதன், காலஞ்சென்ற குணரத்தினம், கனகரத்தினம், ராணி, தர்மரத்தினம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-07-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் சாமியன் அரசடி கரவெட்டி மத்தி கரவெட்டியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2024 04:00)
